Friday, January 10, 2014

Food for thought!

எந்தவொரு சூழலும் ஒவ்வொரு நிமிடமும் நமக்கு கற்பிப்பதற்கென ஏதேனுமொன்றை வைத்திருக்கும். அதை எடுத்துக் கொள்வதும், விட்டுச் செல்வதும் நமக்குள்ள பக்குவத்தை பொருத்தது! அனால் அப்பக்குவத்தை பெற நாம் அடைய வேண்டிய துன்பங்களும், அவமானங்களும் ஏராளமே! ஆகையால் அனுபவங்களிருந்து அறிவு பெறுதலை பழக்கமகுதலே நன்று! ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது எனும் தாராள தமிழ் பழமொழி நூற்றுக்கு நூறு சதம் உண்மை!குடும்பம் எனப்படுவது செண்பக சோலையாகவும் இருக்கலாம்; வறண்ட பாலையாகவும் அமையலாம். எப்படியாயினும் அதை கையாளுவதில் நிதானமும், திறமையுடன் கூடிய பொறுமையும் தேவைப் படுகிறது. அவ்விதம் இல்லையேல் வாழ்வின் எவ்வித சூழ்நிலையும் நம்மை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் போது அதற்குரிய மன தைரியத்தையோ, சூழ்நிலையை கையாளும் லாவகத்தையோ நமக்கு தராது. இவையனைத்தும் பிறர் பற்றிய புரிதலிலேயே பெரும்பான்மையாக அடங்கியிருக்கிறது. எனவே குற்றம் காணுதல் எனும் நீச்ச குணம் இன்றி சூழ்நிலையை நிதானத்துடன் கவனித்து அறிதலிலேயே உலக அறிவு முதிர்ச்சி பெறுகின்றது.

 (தமிழில் யோசிக்கும் போது நமது எண்ணப் பிரவாகத்தின் வேகத்திற்கு எழுத்தின் வேகத்தை கொண்டு ஈடு செய்ய இயல்வதில்லை.  எனவே என் எண்ணங்களில் இருபது சதவிகிதமே எழுத்தாக விழுகின்றது!)