Saturday, January 5, 2013

பலாப்பழத்தைப் பிளக்காமல் சுளையின் எண்ணிக்கை!


சங்க காலத்திலேயே எழுதப்பட்ட கணக்கதிகாரம் என்ற நூலில் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையை அறிந்துகொள்ளும் வழிமுறை மிக எளிமையாகக் கூறப்பட்டுள்ளது.







                               "பலாவின் சுளையறிய வேண்டுதிலேல் ஆல்கு
                                சிறுமுள்ளுக் காம்பரு எண்ணி - வருவதை
                                ஆறிற் பெருக்கியே ஐந்தனுக் கீந்திடவே
                                வேறெண்ண வேண்டாஞ் சுளை."
                                                                                             - கணக்கதிகாரம்-

விளக்கம் :

பலாப்பழத்தின் காம்புக்கு அருகில் உள்ள சிறு முட்களை எண்ணி ஆறாலே பெருக்கி ஐந்தால் வகுக்க பலாப்பழத்தினுள் உள்ள சுளைகளின் எண்ணிக்கையை அறியலாம் !

பண்டைய தமிழர்கள் எதை தான் விட்டு வைத்திருக்கின்றனரோ!!

1 comment:

  1. Hai Abinaya,
    Can you tell me about கணக்கதிகாரம்.Which type of book ?

    ReplyDelete