Friday, April 27, 2012

ஆய கலைகள் அறுபத்தி நான்கு

ஆயகலைகள் அறுபத்தி நான்கினையும்

ஏய உய்விக்கும் என் அன்னை

தூய உறுபளிங்கு போல் வாழ் – என்

உள்ளத்தில் இருப்பள் வாராது இடரே!என்ற பாடலைக் கேள்வி பட்டிருக்கிறோம்.

அந்த அறுபத்தி நான்கு ஆயகலைகள் எவை?
போஜராஜன் பற்றிய ஜாதகக் கதைகளில் இவற்றைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. அவற்றின் வடமொழிப் பெயர்களும் விளக்கமும்

வரிசை எண் வடமொழிப் பெயர் தமிழ் பெயர் / விளக்கம்

1. கீதம் பாடல்

2. வாத்யம் இசைக்கருவிகள்

3. நர்த்தனம் ஆடல்

4. நாடகம் நாடகம்

5. சித்ரம் ஓவியம்

6. தண்டுலகுஸுமபலிவிகரம் திருஷ்டிகழித்தல் கோலமிடுதல் முதலியவை

7. புஷ்பாஸ்தரணம் பூ வேலைப்பாடுகள் மட்டும் அலங்கரிப்புகள்

8. விசேஷ கச்சேத்யம் விசேஷ முக அலங்கரிப்பு

9. தசனவஸநாங்கராகம் மருதாணி மற்றும் மூலிகை அலங்கரிப்பு

10. மணிபூமிகாகர்மா நகைகள் செய்வதற்கான ஆயத்த வேலைகள்

நகை வடிவமைப்பு

11. சயனஸுகம் படுக்கை, மெத்தை, அமருகைகள் வடிவமைத்தல்

12. உதக வாத்யம் / உதககாதம் புலன் விளையாடுதல்

13. சித்தயோகம் யோகக் கலை

14. மால்யக்ரதனம் பூ மாலை, தோரணங்கள் கட்டுதல்

15. சேகராபீடயோஜனம் கொண்டை அலங்காரம் (Hair style)

16. நைபத்ய யோஜனம் எதிர்பாலரை ஈர்த்தல்

17. கர்ணபத்ரபங்கம் தோடு, தொங்கட்டான் நகை வடிவமைப்பு

18. ஸுகந்தயுக்தி வாசனைப் பொருட்கள் தயாரிப்பு

19. பூஷன யோஜனம் உடையலங்காரம் / ஆடை அலங்கரிப்பு

20. பதாதிசஸ்த்ர ஸந்தானம் காலாட்படை பராமரிப்பு மற்றும் அவற்றின் ஆயுத வடிமவைப்பு, பயிற்சிகள்

21. சுளசுமாரயோகம் மளிகைப் பொருட்களை தாயாரித்தல்

22. ஹஸ்தலாவகம் கை வேலைப்பாடுகள்

23. பாகக்ஞானம் / பாகசாஸ்த்ரம் சமையல் கலை

24. ஆஸவாதிரசனை நீர் ஆகாரங்கள் பானங்கள் தயாரித்தல்

25. ஸூசீவாபகர்மம் தையல், ஊசி வேலைகள்

26. ஸூத்ரக்ரீடை நூல் வேலைப் பாடுகள்

27. வீணாதிரசனை வாத்யக்கருவிகள் தயாரித்தல்

28. ப்ரஹேளிகை தண்ட நீதி

29. ப்ரதிமாலா போட்டி பாடல் / எதிர் பாட்டு பாடுதல்

30. துர்வாசக யோகம் மல்யுத்தம், குத்துச்சண்டை பயிற்சிகள்

31. புஸ்தகவாசனம் கல்வியறிவு

32. ஆக்யாயிகாகதனம் பழைய நிகழ்வுகள், கதைகள், வரலாற்று அறிவு

33. காவ்ய ஸமஸ்யா நீதிக்கதை, காவிய (இலக்கிய) அறிவு

34. பட்டிகாவேத்ரவிகல்பம் தற்காப்பு ஆயுதங்கள் செய்தல்

35. தர்க்க சாஸ்த்ரம் தர்கக் கலை

36. தக்ஷணம் தச்சு வேலை

37. வாஸ்துவித்யா கட்டிடக்கலை

38. ரத்னபரீக்ஷை ரத்தினக்கற்களைப் பற்றிய அறிவு

39. க்ரஹக்ஞானம் சோதிட அறிவு

40. தாது வாதம் உலோகங்களைப் பற்றிய அறிவு

41. ஆகரக்ஞானம் அகழ்வாய்வு

42. வ்ருக்ஷாயுர்வேதம் மரம், தோட்டக்கலை, மூலிகையறிவு

43. குக்குடாதி யுத்தவிதி விலங்குப் போட்டிக்கு பயிற்பித்தல்

44. சுகசாரிகாலாபம் கிளி, புறா போன்ற பறவை பயிற்சி

45. உத்ஸாதனம் அழுத்தங்களிலிருந்து மனதையும் உடலையும் விடிவித்தல் (relaxing / relieving from tension etc.)

46. தேசாடனம் பிற தேசங்களைப் பற்றிய அறிவு

47. அக்ஷரமாத்ருகை / பால சிக்ஷை விரல்களால் சைகை செய்தல்

48. குவிகல்பம் விகடம்

49. தேசபாஷாஞானம் பிற மொழியறிவு

50. யந்த்ர மாத்ரகம் இயந்திர அறிவு

51. தாரணஞானம் சரியானவற்றைத் தேர்ந்தெடுக்கும் அறிவு (சில இடங்களில் பொருட்கள் மற்றுமன்றி வார்த்தைகளின் உள்ளர்த்தம் அறிவதையும் குறிப்பதால், ரகசியங்களை – குறிப்பாக ஒற்றர்களின் சங்கேதங்களை – விடுவிக்கும் கலை (cryptology) என்றும் கூறலாம்

52. ஸம்வாச்யம் சங்கேதக் குறிப்புகளை உருவாக்குதல்

53. மானஸீக்ரியா அஷ்டாவதானம், தசாவதானம், சதாவதானம் மாயவித்தைகள் போன்ற அறிவு

54. அபிதான கோசம் நிகண்டுகள், இலக்கண அறிவு

55. சந்தோகஞானம் மருத்துவ அறிவு

56. க்ரியா விகல்பம் நித்திய கர்மங்கள் பற்றிய அறிவு

57. சலிதகயோகம் சாகச வேலைகளைச் செய்தல்

58. கோபனம் உடல் கூறுகள் மற்றும் கலவி அறிவு (உள்ளாடைகள் வடிவமைப்பு – வஸ்தர கோபம் – என்றும் கூறுவர்)

59. த்யூதவிசேஷம் சூதாட்டம் [சதுரங்கம் போன்ற விளையாட்டுகள் (indoor games) பற்றிய அறிவு என்றும் கூறுவர்]

60. ஆகர்ஷக்ரீடை போர் பயிற்சி

61. பாலககிரித்னகம் குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள், பொம்மைகள் செய்தல்

62. வைநயிகி வித்யா நீதி பரிபாலனம்

63. ரஜ்ஜுக்ஞானம் கயிறு, சங்கிலி, ஏணி, கூடாரம் போன்றவைத் தயாரித்தல்

64. வைதரளகம் ஓடம், கப்பல் கட்டுதல், கடல் பயணம் செய்தல்


இவையனைத்தும் வடமொழி நூலிலிருந்துத் தொகுக்கப்பட்டவை. இவற்றில் சில இன்றைக்கு பொருந்துவதில்லை; சில வழக்கொழிந்து விட்டன. இன்றைய நிலையில் மேலும் பல கலைகள் சேர்க்கலாம். வாத்சாயனரின் காமசூத்திரத்திலும் இது போல ஒரு பட்டியல் இருக்கிறது. ”மொழி ஞாயிறு” தேவநேயபாவணர் தொகுத்த செந்தமிழ் பேரகரமுதலியில் இவற்றைத் தொகுத்துள்ளார். அவை:


1. எழுத்திலக்கணம் -அக்கரவிலக்கணம்

2. எழுத்தாற்றல் -   லிகிதம்

3. கணிதம் -           கணிதம்

4. மறைநூல் - வேதம்

5. தொன்மம் -  புராணம்

6. இலக்கணம் -   வியாகரணம்

7. நயனூல் -  நீதி சாத்திரம்

8. கணியம் -  சோதிடம்

9. அற நூல் -  தரும சாத்திரம்

10 ஓகநூல் -  யோக சாத்திரம்

11. மந்திர நூல்  -  மந்திர சாத்திரம்

12. நிமித்திகம் -  சகுனம்

13. கம்மியம் -  சிற்பம்

14. மருத்துவம்  -  வைத்தியம்

15. உறுவமைப்பு- சாமுத்ரிகா லட்சணம்

16. மறவனப்பு-  இதிகாசம்

17. வனப்பு -  அழகு

18. அணிநூல் -  அலங்காரம்

19. மதுரமொழிவு -  மதுர பாஷணம்

20. நாடகம்-  நாடகம்

21. நடம் -  ந்ருத்யம்

22. ஒலிநுட்ப அறிவு - சத்த ப்ரமம்

23. யாழ் - வீணை வாதனம்

24. குழல் - வேணு கானம்

25. மதங்கம் மிருதங்கம்

26. தாளம்-  தாளம்

27. விற்பயிற்சி -  அஸ்த்ர கலை

28. பொன் நோட்டம் - கனக பரீக்ஷா

29. தேர் பயிற்சி-   ரத பரீக்ஷா

30. யானையேற்றம்- கஜ பரீக்ஷா

31. குதிரையேற்றம் -  அஸ்வ பரீக்ஷா

32. மணிநோட்டம் -  ரத்தின பரீக்ஷா

33. மண்ணியல் -  பூமி பரீக்ஷா

34. போர்ப் பயிற்சி -  ஸங்கிரமண சாத்திரம்

35. மல்லம் (மல்யுத்தம்) -  துவந்த யுத்தம்

36. கவர்ச்சி - ஆகர்ஷணம்

37. ஓட்டுகை -  உச்சாடணம்

38. நட்பு பிரிப்பு (பேதம்)-  வித்வேஷணம்

39. காமநூல் - மதன சாத்திரம்

40. மயக்கு நூல்-  மோஹன சாத்திரம்

41. வசியம் - வஷ்ய கரணம்

42. இதளீயம் - ரச வாதம்

43. இன்னிசைப் பயிற்சி - காந்தருவ வாதம்

44. பிறவுயிர் மொழியறிவு - பைபீல வாதம்

45. மகிழுற்த்தம் - கவுத்துக வாதம்

46. நாடிப் பயிற்சி - தாது வாதம்

47. கலுழம்  - காருடம்

48. இழப்பறிகை -  நஷ்டம்

49. மறைபொருள் அறிதல் -  முஷ்டி

50 வான்புகவு - ஆகாய ப்ரவேசம்

51. வான் செலவு - ஆகாய கமனம்

52. கூடுவிட்டு பாய்தல் - பரகாய ப்ரவேசம்

53. தன்னுருக் கரத்தல் - அதிருஷ்யம்

54. மாயச்செய்கை - இந்திர ஜாலம்

55. பெருமாயச்செய்கை- மகேந்த்ர ஜாலம்

56. அழற்கட்டு - அக்னிஸ்தம்பம்

57. நீர்க்கட்டு -ஜலஸ்தம்பம்

58. வளிக்கட்டு - வாயுஸ்தம்பம்

59. கண்கட்டு - த்ருஷ்டுஸ்தம்பம்

60. நாவுக்கட்டு - வாக் ஸ்தம்பம்

61. விந்துக் கட்டு - சுக்கிலஸ்தம்பம்

62. புதையற்கட்டு - கனனஸ்தம்பம்

63. வாட்க்கட்டு - கட்க ஸ்தம்பம்

64. சூனியம் - அவஸ்த்யா ப்ரயோகம்

இவை, பிற்காலத்தில் சீரமைக்கப்பட்டிருக்கலாம். ஏனென்றால், முதல் பட்டியலைவிட இவை ஓரளவு ஏற்புடையதாக இருக்கின்றன.

No comments:

Post a Comment