Friday, August 6, 2010

My First Poem - Amma!

அம்மா!
நான் மகிழும் போது நிம்மதியடைந்தாள்;
வருந்தும் போது வாட்டமுற்றாள் ;
அழும் போது கண்ணீர் துடைத்தாள் - நான்
உழைப்பதை கண்டு ஆனந்தப் பட்டாள்;
தேவையெனில் ஆலோசனை தந்தாள்
தவறுகள் செய்தால் கண்டிக்கவும் செய்தாள்;

பேறு காலத்தில் பட்ட கஷ்டத்தை 
      சொல்லிக் காட்டுவதில்லை - பிறர்
குற்றம் குறை கூறும் போது என்னை
      விட்டுக் கொடுத்ததுமில்லை;

தாலி வழி வந்த உறவை காட்டிலும்
தன்னுளிருந்து வந்த உறவைப் பெரிதாய் நினைப்பவள்;

தனக்கு பசித்தாலும் 'வயதுப் பிள்ளை
   வயிறார உண்ணட்டும்' என்று
பட்டினி கிடக்கும் பக்குவம் பெற்றவள்;

எனக்கு சிறு கேடு நடப்பினும், பரிதவித்துப்
      போகும் முதல் ஆள்!

நான் வார்த்தைகளை விஷமாய் கொட்டினாலும்
    என் நலனுக்காக தவமிருப்பவள்;
என் தவறுகளை மன்னிக்க கற்றவள்;
என்னை திருத்தம் செய்தவள்;

'வல்லவளாய் வாழ்வதை விட
   நல்லவளாய் இருக்க கற்று கொள்'
என்று இன்றளவும் கூறி வருபவள்!

அம்மா!
      உன் உள்ளத்து அன்பை நீ
           ஒட்டு மொத்தமாய் கொட்டவில்லை;
      உன் ஒவ்வொரு செயலிலும்
           வாரி வழங்கிக் கொண்டுதானிருகிறாய்!
                                                                                     -- அபிநயா

எனக்கு கவிதை எழுதிப் பழக்கமில்லை. இது தான் என்னோட முதல் படைப்பு. நிறைய கவிதைகள் படிச்சுருக்கேன். ஆனா ஒன்னு கூட முயற்சி பண்ணதில்ல. இது கவிதையின் இலக்கணப்படி இருக்கானும் தெரியல. என்னை எழுத தூண்டிய சதீஷ் அண்ணனுக்கு நன்றி.  


 கவிதையில் தவறுகள் இருந்தா மன்னிக்கவும். நான் இதில் அ,ஆ,இ,ஈ கற்றுக் கொள்ளும் மாணவி மாதிரி.

10 comments:

  1. அன்பின் அபிநயா...

    நீ தமிழில் எழுதியதற்கு என் முதல் நன்றி...

    அம்மாவைப் பற்றியான அற்புதமான கவிதை.. உன் முதல் கவிதை என்று சொல்லி உள்ளாய் ஆனால் உன் எழுத்து பல கவிதைகள் எழுதியதை போல் உள்ளது.. ஒவ்வொரு வரியும் நன்றாக உள்ளது..

    //பேறு காலத்தில் பட்ட கஷ்டத்தை
    சொல்லிக் காட்டுவதில்லை - பிறர்
    குற்றம் குறை கூறும் போது என்னை
    விட்டுக் கொடுத்ததுமில்லை;//

    இவ்வரிகளை மிகவும் ரசித்தேன்...

    ReplyDelete
  2. அன்னைக்கு இணை அகிலத்தில் ஏதுமில்லை..

    அவளை பற்றி எழுதத்தொடங்கினால்.. தமிழில் கூட வார்த்தைகள் போதாது...

    இந்த வரிகள் தான் அருமை என்று கூற முடியவில்லை அத்தனைக்கு அழுத்தமாக இருக்கிறது ஒவ்வொரு வரிகளும்...

    அருமை சகோதரி..தொடர்ந்து எழுதுங்கள்...

    ReplyDelete
  3. ரொம்ப நல்லா இருக்கு அபி...
    இன்னும் நிறைய எழுதுங்க...
    :)

    ReplyDelete
  4. தாலி வழி வந்த உறவை காட்டிலும்
    தன்னுளிருந்து வந்த உறவைப் பெரிதாய் நினைப்பவள்;


    Good Lines Abi...
    keep it up..!

    ReplyDelete
  5. அதே போல் நீங்களும் ஒரு நல்ல அம்மாவாக இருக்க வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள்... நிறைய எழுதுங்க....

    பிரபாகர்...

    ReplyDelete
  7. அன்புள்ள அபி ...!

    உங்கள் கவிதை படித்தேன்...!
    வார்த்தைகள் அற்ற வாக்கியத்திற்கு சொந்தக்காரனாக
    மாற்றி விட்டீர்கள் என்னை...!!

    என்ன சொல்வது என்று அறியாமல்
    ஒரு நிமிடம் திகைத்து விட்டேன்...!
    அநேகமாக இந்த முறை தான்...
    நான் பேச வார்த்தைகளை தேடுகிறேன்..!

    சில சந்தர்ப்பங்கள் நம்மை
    ஊமை ஆக்கி விடும்...!

    அந்த திகைப்பு நொடிகளில் ...
    என் வாழ்வில் ...
    இதுவும் ஒன்று..!

    கவிதைக்கு என்று
    பல பேருக்கு
    தலை கவிழும்
    எழுதுகோல்கள் ....
    பெரும்பாலும்... காதலையே செதுக்கும்...!

    உங்கள் முதல் சிந்தனை ...!
    உலகில் எல்லோருக்கும்'
    முதலில் சிந்திக்க கற்று கொடுத்தவள்
    பற்றியதாய் அமைந்தது...
    நெகிழச் செய்தது...!

    உலகத்தையே
    தன கருவில்
    அடை காக்கும் ஒரு
    அதிசயம்...!
    அன்னை...!

    வாழ்வில் நமக்கு நேரும் சில
    விஷயங்களை மிகைப் படுத்தி
    கோர்க்கும் வார்த்தைகளால்
    வார்ப்பது தான்
    கவிதை...!

    ஆனால் எந்த
    மிகையும் இல்லாமல் ...!
    உண்மையை படம் பிடித்து
    காட்டும் உங்கள்
    கவிதைக்கு
    இந்த கவிதை விரும்பியின்
    நன்றிகள் ..,....!

    உண்மை எப்போதும்
    அழகு தான்...!
    அந்த உண்மையே
    அன்னையாய் இருந்தால்
    அது பேரழகு ...!

    உங்கள் முதல்
    கவிதையும் ....!
    எந்த முகப் பூச்சும்
    இல்லாத...
    இயற்கை அழகு...!

    என் இனிய
    தங்கை அபியை போல...!


    வாழ்த்துக்கள் ....!


    மா இ செந்தில் குமார் ....!

    ReplyDelete
  8. very nice attempt abinaya my blessings pmd

    ReplyDelete
  9. என் கவிதையை பாராட்டிய உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்!

    சதீஷ் அண்ணன், மிக்க மிக்க நன்றி. என்னை அறிமுகப்படுத்தியதற்கு.

    உங்கள எப்படி கூப்பிடறதுனு ? வெறும்பய, வால்பய கூப்பிடவா, உங்க பேர் என்னனு சொல்ல? எப்படியாயினும் உங்களுக்கு எனது நன்றிகள்!

    கனிமொழி, உங்கள் பிரசங்கத்துக்கு நன்றி. and, i removed word verification.

    பிரபாகர், கண்டிப்பாக தொடர்ந்து எழுதுகிறேன். நன்றி.

    ReplyDelete